மக்கள் உயிரை துச்சமாக நினைத்து செயல்படுவதா? பிரேலமதா கண்டனம்

3 months ago 18

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ரயில் விபத்துக்கு தொழில்நுட்ப பிரச்னை காரணம் என்று சொல்கின்றனர். மக்கள் உயிரை துச்சமாக நினைத்து கவனக்குறைவாக செயல்படும் அரசுகள் உடனடியாக விபத்துகள் நடக்காத வண்ணம் கவனம் செலுத்தி, மக்களைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம். நல்வாய்ப்பாக உயிர் சேதம் இல்லை என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும், இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காத வண்ணம் கவனமாக செயல்பட வேண்டியது அரசுகளின் கடமை. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மக்கள் உயிரை துச்சமாக நினைத்து செயல்படுவதா? பிரேலமதா கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article