மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு

2 hours ago 1

*மாணவ, மாணவிகளுடன் எஸ்பி கலந்துரையாடல்

மயிலாடுதுறை : பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட எஸ் பி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது .

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட எஸ் பி ஸ்டாலின், உத்தரவுபடி பொதுமக்களுக்கு பல்வேறு குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, திருட்டு குற்றங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு.

இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று மயிலாடுதுறை மண்ணம்பந்தல் பகுதியில் அமைந்துள்ள ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்சியானது மாவட்ட காவல் துறையின் சார்பில் நடத்தப்பட்டது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாவட்ட எஸ் பி ஸ்டாலின்.சிறப்புரை ஆற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பெண் கல்வியின் முக்கியத்துவம், POCSO வழக்கின் படியான குற்றங்கள் மற்றும் தண்டனைகள், பெர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தண்டனைகள், படிக்கும் வயதில் பாலியல் தொடர்பான செயல்களில் ஈடுபடாமல் உறுதியாக இருத்தல், மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அவை நடைபெற்ற விதம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், சட்ட நடவடிக்கைகள், பாலியல் ரீதியான இடையூறுகளிலிருந்து தற்காத்துகொள்ளுதல், \”காவல் உதவி\” செயலிகளின் இயக்கம் மற்றும் பயன்கள், சமூக வலைதளங்களை கையாளும் விதம் ஆகியவைகள் குறித்து மாவட்ட காவல் எஸ் பி ஸ்டாலின் பேசினார்.

மேலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தும், காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு டிஎஸ்பி பாலாஜி, இன்ஸ்பெக்டர் கருணாகரன், சிவக்குமார், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகந்தி, மற்றும் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசினர் . இந்த ஏவிசி பொறியியல் கல்லூரியின் இயக்குநர் செந்தில் முருகன், கல்லூரி முதல்வர் நாகராஜ் மற்றும் 1000 கலந்துகொண்டனர்.

 

The post மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article