மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா.விருது.. திட்டத்தின் ஆழமான தாக்கத்திற்கு விருது என்பது ஒரு சான்றாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

1 month ago 7

சென்னை: தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தலப்பாக்கத்தில் கூறியதாவது;

இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத்தேடிமருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது!

ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்.

ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது!

சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி – கண்காணித்து – மேம்படுத்தி வரும் அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்!. இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

The post மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா.விருது.. திட்டத்தின் ஆழமான தாக்கத்திற்கு விருது என்பது ஒரு சான்றாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!! appeared first on Dinakaran.

Read Entire Article