சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் : ஒன்றிய அரசு எச்சரிக்கை

4 hours ago 2

டெல்லி : இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் போராக வெடிக்கும் அபாயத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு எதிரான சைபர் தாக்குதல்களும் தவறான தகவல் பரவலும் அதிகரித்து வருகின்றன. அரசு துறைகள் மட்டுமின்றி, வணிகங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களும் ஆபத்தில் உள்ளனர். அவசர எச்சரிக்கைகள் அல்லது அரசு ஆலோசனைகள் என்ற கோர்வையில், ஃபிஷ்ஷிங் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.

இந்தியாவின் முக்கிய உள் கட்டமைப்புகளை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், ரிசர்வ் வங்கி, தேசிய பணபரிவர்த்தனை கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் உயர் அதிகாரிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் : ஒன்றிய அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article