‘மக்களை பாதிக்கும் நகைக்கடன் விதிகளை திரும்பப் பெறுக’ - ஆர்பிஐ-க்கு ராமதாஸ் வலியுறுத்தல்

4 hours ago 3

சென்னை: நகைக்கடன் வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவு விதிகளின் குறிப்பிட்ட சில பிரிவுகளை திரும்பப் பெற வேண்டும் அல்லது தற்போதைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நகைக்கடன் பெறவே முடியாது என்ற சூழலை உருவாக்கும் இந்த புதிய விதிமுறைகள் கண்டிக்கத்தக்கவை.

Read Entire Article