மக்களவையின் செயல்திறன் 57.87%

4 weeks ago 6

புதுடெல்லி: மக்களவையின் குளிர் கால கூட்ட தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான 2 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கூட்டம் தொடங்கிய நாள் முதலே, அதானி லஞ்ச விவகாரம், தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், அம்பேத்கர் பற்றி அமித் ஷாவின் சர்ச்சை கருத்துக்களால் கடும் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதையடுத்து அவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்துள்ளார்.

குளிர்கால கூட்ட தொடரின் மொத்த செயல் திறன் 57.87 சதவீதம் பதிவாகியுள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பிஆர்எஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் மக்களவை கூட்டம் நடந்த 20 நாள்களில் 12 நாட்கள் வரை 10 நிமிடங்களுக்கு மேலவையில் கேள்வி நேரம் நடக்கவில்லை. பல்வேறு ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ்கள் பெறப்பட்ட போதிலும் எதுவும் ஏற்று கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.

The post மக்களவையின் செயல்திறன் 57.87% appeared first on Dinakaran.

Read Entire Article