மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தியை கட்டாயமாக்க கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக மகாராஷ்டிரா மாநில கல்வியமைச்சர் தாதா புசே கடந்த ஏப்ரல் 22ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு திருத்தப்பட்ட உத்தரவை பிறப்பித்தது. அதில், ‘மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்தி 3வது மொழியாகக் கற்பிக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தி பொதுவாக 3வது மொழியாக இருக்கும். ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் இந்தி தவிர வேறு எந்த இந்திய மொழியைப் படிக்க மாணவர்கள் விரும்பினால், குறைந்தது 20 பேராவது அந்த மொழியைத் தேர்வு செய்திருக்க வேண்டும். மற்றபடி, அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி கட்டாயப்பாடமாக இருக்கும்’, எனத் தெரிவித்துள்ளது.இது புறவாசல் வழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என காங்கிரஸ், நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
The post மகாராஷ்டிராவில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் appeared first on Dinakaran.