புதுடெல்லி: மகாராஷ்ரா மாநிலத்தில் நவ.20ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) ஆகியவை இணைந்து ஒருபிரிவாகவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பா.ஜ ஆகியவை இணைந்து இன்னொரு பிரிவாகவும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் 210 தொகுதிகள் பிரிக்கப்பட்டு விட்டன. இன்னும் 78 தொகுதிகள் பங்கீடு செய்ய வேண்டிய நிலையில் அக்.29ம் தேதி மனுத்தாக்கல் முடிய உள்ளது.
இந்தநிலையில் கடந்த வாரம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள 62 தொகுதி வேட்பாளர் பட்டியல் பரிசீலிக்கப்பட்டது. நேற்று மீதம் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பரிசீலனை செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று கூடியது. அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கலந்து கொண்டனர்.
The post மகாராஷ்டிரா வேட்பாளர்கள் தேர்வு; காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனை appeared first on Dinakaran.