மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜீவன் - விஜய் சுந்தர் ஜோடி

7 hours ago 2

புனே,

மகாராஷ்டிரா ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஆஸ்திரேலியாவின் பிளேக் பெய்ல்டன் மேத்யு - கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-3, 10-0 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

இதன் மூலம் 3-6, 6-3, 10-0 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பிளேக் பெய்ல்டன் மேத்யு - கிறிஸ்டோபர் ரோமியோஸ் ஜோடியை வீழ்த்திய ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Read Entire Article