
சென்னை,
விஜய் சேதுபதி நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான படம் மகாராஜா. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் இந்தியா மட்டுமல்லாமல் சீனாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் மகாராஜா 2 படத்திற்கான கதையை நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நித்திலன் சுவாமிநாதன் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில, நடிகர் விஜய் சேதுபதி 'ஏஸ், டிரெயின்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடந்து பாண்டியராஜ் இயக்கத்திலும், பூரி ஜெகன்நாத் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை முடித்த பின்னரே மகாராஜா 2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.