நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி, மேல சடையம்மன்குளம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஜோஸ்வா (வயது 57), நாங்குநேரியில் உள்ள தனியார் காட்டன் மில்லில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் (15.5.2025) ஒரு தனியார் காட்டன் மில் கம்பெனியில் பணிபுரியும் பெண்களை அழைத்து வர வேண்டி நான்கு சக்கர வாகனத்தில் செங்குளம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அம்பாசமுத்திரம், வழுதூர், தெற்கு தெருவை சேர்ந்த செல்லப்பா மகன் சுப்பையா(எ) கார்த்திக்(29), ஜோஸ்வா வந்த நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு லைட் டிம் அடிக்க மாட்டியா என்று கூறி அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளளார். இதுகுறித்து ஜோஸ்வா பாப்பாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மேதாஜி சிதம்பரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுப்பையா(எ) கார்த்திக்கை நேற்று (16.5.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.