மகாசிவராத்திரி என்பது புனிதமான சனாதன விழிப்புணர்வு திருவிழா: கவர்னர் ஆர்.என்.ரவி

5 hours ago 2

மதுரை,

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், மகா சிவராத்திரியையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

மகாசிவராத்திரி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மகாசிவராத்திரி என்பது ஒரு புனிதமான சனாதன விழிப்புணர்வுத் திருவிழா. மந்தநிலையிலிருந்து விழித்தெழுந்து, குழப்பங்களுக்கு மத்தியில் தெளிவைத் தேடவும், சிறந்த மாற்றத்தைத் தழுவவும் விடுக்கப்படும் அழைப்பு இத்திருவிழா. இது நாட்டின் பரந்த நன்மைக்காக சுய விழிப்புணர்வு மற்றும் புத்துயிர் பெறுவதைக் குறிக்கிறது.

சிவபெருமான் மற்றும் ஆதி சக்தியின் தெய்வீக சங்கமம் நமக்குத் தேவையான மாற்றத்திற்கான ஆற்றல்வாய்ந்த சக்தியை வழங்கட்டும். மேலும் வளர்ச்சியடைந்த பாரதம் 2047 -ஐ உருவாக்க நமது மக்களிடையே ஆன்மிக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கட்டும். ஹர ஹர மகாதேவா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article