
புது டெல்லி,
சிவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகை மகாசிவராத்திரியாகும். இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவர்து:-
மகாசிவராத்திரி புனிதப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் அனைவரின் மீதும் பகவான் மகாதேவரின் ஆசீர்வாதம் நிலைத்திருக்க வேண்டும் என்றும், நமது நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.