
மதுரை,
இன்று மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இன்று மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1,200க்கும், ஒரு கிலோ பிச்சி பூ ரூ.800க்கும், ஒரு கிலோ முல்லைப் பூ ரூ.1,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.