மகா கும்பமேளாவின் போது இலவச ரயில் பயணம் கிடையாது: நிர்வாகம் விளக்கம்

4 months ago 20

சென்னை: மகா கும்பமேளாவின் போது இலவச ரயில் பயணம் கிடையாது என ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெறும் நிலையில், இந்நிகழ்வு அடுத்தாண்டு ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்நிகழ்வுக்கு செல்ல ரயில்வே நிர்வாகம் இலவச ரயில் வசதிகளை அளிக்கிறது என ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த அறிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என இந்திய ரயில்வே திட்டவட்டமாக மறுக்கிறது. மகா கும்பமேளா அல்லது வேறு எந்த நிகழ்ச்சியின் போதும் இலவசப் பயணத்திற்கான ஏற்பாடுகள் இல்லை என ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மகா கும்பமேளாவின் போது இலவச ரயில் பயணம் கிடையாது: நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article