மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

1 week ago 4

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். கடந்த 13-ந்தேதியில் இருந்து இதுவரை புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 27 கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

தை அமாவாசையையொட்டி கடந்த 29ம் தேதி அதிகாலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட 7 கோடியே 64 லட்சம் பேர் திரண்டனர். சிலர் தடுப்புகளை தாண்டி குதித்து சென்றதால் ஏற்பட்ட தள்ளு முள்ளு மற்றும் நெரிசல் காரணமாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 4 பேர், மேற்குவங்காளத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 30 பக்தர்கள் பலியானார்கள். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 36 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்த 30 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்த கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையில் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article