தர்மபுரி, பிப். 22: தர்மபுரி மாவட்டம். காரிமங்கலம் அருகே அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மனைவி பேபி (41). இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். கடந்த 19ம் தேதி மாலை பேபி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், பேபியின் 2 மகள்களில் ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தனர். திருமணம் பிடிக்காமல், மகள் சென்னைக்கு படிக்க சென்றதால் திருமணம் நின்று போனது. இதனால் பேபி மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
The post மகள் திருமணம் நின்றதால் தாய் தூக்கில் தற்கொலை appeared first on Dinakaran.