மகளிர் பிரீமியர் லீக் வெளியேற்றுதல் சுற்று: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

17 hours ago 2

மும்பை,

3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் கடந்த மாதம் 14-ந் தேதி வதோதராவில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பெங்களூரு, லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் லீக் சுற்று நடந்தது.

லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் (5 வெற்றி, 3 தோல்வி, 10 புள்ளி) முதலிடம் பிடித்து தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மும்பை இந்தியன்ஸ் (10 புள்ளி) ரன்-ரேட் அடிப்படையில் பின்தங்கியதால் 2-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (8 புள்ளி) 3-வது இடமும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (6 புள்ளி), உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளி) முறையே 4-வது, 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறின.

இதில் மும்பையில் உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் - மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Read Entire Article