
வதோதரா,
மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த 2023-ம் ஆண்டு பி.சி.சி.ஐ அறிமுகம் செய்தது. இந்த தொடரின் முதல் சீசனில் மும்பை அணியும், 2வது சீசனில் பெங்களூரு அணியும் கோப்பையை வென்றன. இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது.
நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
வதோதராவில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.