பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யுபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், உபி வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், டேன்னி வையாட் ஹாட்ஜ்ஜும் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். 4வது ஓவரில் 6 ரன் எடுத்திருந்த மந்தனா, தீப்தி சர்மா வீசிய அற்புதமான பந்தில் கிளீன் போல்டாகி அதிர்ச்சி தந்தார்.
இருப்பினும் வந்த வந்த எலிஸ் பெரியும், டேன்னியும் வாரியர்ஸ் அணி வீராங்கனைகளின் பந்துகளை துவம்சம் செய்து ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 94 ரன் குவித்து வலுவான அடித்தளம் அமைத்து தந்தது. டேன்னி, 57 ரன்னில், தஹ்லியா மெக்ராத் பந்தில் ஷெராவத்திடம் கேட்ச் தந்து வெளியேறினார். பின் வந்த ரிச்சா கோஷ் 8, கனிகா அஹுஜா 5, ஜார்ஜியா வேர்ஹாம் 8 ரன்னில் அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழந்து 181 ரன் குவித்தது. எலிஸ் பெரி 55 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரிகள் விளாசி 90 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். பின் 182 ரன் வெற்றி இலக்குடன் உபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது.
The post மகளிர் பிரீமியர் லீக் பெங்களூரு அணி 181 ரன் குவிப்பு appeared first on Dinakaran.