
சென்னை,
சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களில் மகளிர் விடியல் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை சுமார் 132.91 கோடி பேர் பயணித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 3.65 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மகளிர் விடியல் பயண திட்டம் அறிமுகமானதில் இருந்து இதுவரை ஒரே நாளில் அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 28-ந் தேதி அன்று 13.59 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேற்கண்ட தகவலை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.