மகளிர் டி20 கிரிக்கெட்; 3வது போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

5 hours ago 3

லண்டன்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி லண்டன் ஓவலில் இன்று நடக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்ட இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றியோடு தொடரை கைப்பற்றும் வேட்கையுடன் தயாராகி வருகிறது.

அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற இங்கிலாந்து கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 11.05 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article