மகளிர் டி20 உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

3 months ago 30

துபாய்,

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்த தொடருக்கான இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் முறையே ஸ்காட்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும், வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கையும் வெற்றி பெற்றன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 3 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டங்கள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன.

Read Entire Article