மகளிர் கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி

13 hours ago 6

கொழும்பு,

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின .

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமரி அத்தபது பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அன்னெரி டெர்க்சன் 61 ரன்கள் எடுத்தார் . இலங்கை அணியில் மல்கி மதரா 4விக்கெட்டுகள் வீழ்த்தினர் .

தொடர்ந்து 236 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 46.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட்டுகள் வித்தியசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 

Read Entire Article