
கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 58 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் சுகந்திகா குமாரி, சமாரி அத்தபத்து தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 276 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 49.1 ஒவரில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 278 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 56 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் ஸ்னே ராணா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டாலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 7ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.