
கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாளை நடைபெற உள்ள 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி 2 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி ஒரு வெற்றியுடன் 2வது இடத்தில் உள்ளது .
நாளை காலை 10 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.