மகளிர் ஆக்கி: ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 3-வது தோல்வி

13 hours ago 1

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் ஆக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான 2 ஆட்டங்களில் இந்தியா தோல்வியை தழுவியது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய சீனியர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் நேற்று நடைபெற்றது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் கோர்ட்னி ஸ்கோனெல் மற்றும் ஸ்டிவர்ட் கிரெஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த தொடரில் இந்திய அணி இன்னும் ஒரு வெற்றி கூட பெறவில்லை. இந்த சூழலில் அடுத்த ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.

Read Entire Article