மதுரை, ஜன. 22: தமிழ்நாட்டில் பெண்கெளுக்கான புதிய சேமிப்பு திட்டத்தை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மகளிர் மேன்மை சேமிப்புப்பத்திரம்’ என்ற பெயரில் இந்த திட்டம் மாதம் ரூ.1000 இருந்து அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வு காலம் 2 ஆண்டுகள் வரை உள்ளது. அனைத்து பெண்கள் மற்றும் பெண்குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
ஒரேபெயரில் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம், ஒரு வங்கி கணக்கு துவங்கி 3 மாதங்கள் முடிவடைந்த பின்னர் அடுத்த புதிய கணக்கினை தொடங்கலாம். முதலீட்டுக்கு 7.8% வட்டிவீதம் வழங்கப்படும். சேமிப்புபணத்தில் 40 சதவீதத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு எடுத்து கொள்ளலாம். கணக்கு தொடங்கியவர் இறந்தாலோ அல்லது பாதுகாவலர் இறந்தாலோ உரிய ஆவணங்களை சமர்ப்பித்து முதிர்வுத் தொகையை பெறலாம். இத்திட்டம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கானது. வரும் மார்ச் 31 வரை மட்டுமே இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.
The post மகளிருக்கான புதிய சேமிப்பு திட்டம் அஞ்சல் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.