மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு

2 months ago 13

சென்னை,

சென்னையில் தினமும் சுமார் 3,200 பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. இதில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகள் சுமார் 1,500 வரை இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக சென்னை மாநகர பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி சிவப்பு நிறத்தில் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக உள்ள 174 மாநகரப் பேருந்துகளை விடியல் பயணத் திட்ட பேருந்துகளாக மாற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது. வருவாய் குறைவாக உள்ள பேருந்துகளை மகளிர் கட்டணமில்லா பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விடியல் பயணத் திட்டப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை சராசரியாக 63 சதவீதமாக உள்ளது.

Read Entire Article