மகளின் பெயரை அறிவித்த நடிகை தீபிகா படுகோன்

2 months ago 15

மும்பை,

தீபிகா படுகோன் தமிழில் கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானார். இந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அறிமுகமான அவர் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து பிரபலமானார்.

பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன். திரையுலகில் இருவரும் இணைந்து நடித்து வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்த பலரும் இதில் கலந்துகொண்டனர்.

திருமணம் செய்துகொண்ட பின்பும் பல படங்களில் நடித்தார். இறுதியாக கல்கி படம் வெளியானது. கருவுற்ற பின் கல்கியின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வைரலானார். நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோனே எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. விநாயகர் சதுர்த்தி அன்று மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனையில் பிரசவத்திற்காக தீபிகா படுகோன் அனுமதிக்கப்பட்டார். பின், ஒருநாள் கழித்து தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்ததை தீபிகாவும் ரன்வீரும் இணைந்து அறிவித்தனர்.

நடிகை தீபிகா படுகோனேயின் பெண் குழந்தைக்கு 'துவா படுகோனே சிங்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தங்களது பெண் குழந்தையின் புகைப்படத்தை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதி முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த பதிவில், "துவா என்றால் பிரார்த்தனை என்று அர்த்தம். ஏனென்றால் எங்கள் பிரார்த்தனைகளுக்கான பதில் அவள். எங்கள் இதயம் முழுவதும் அன்பும் நன்றியுணர்வும் நிரம்பியுள்ளது" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article