மகளிடம் 3வது கணவர் செய்த அசிங்கம்: விஷயம் தெரிந்தும் கண்டுகொள்ளாத தாய்

10 hours ago 1

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூரில், எட்டாம் வகுப்பு மாணவி வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குன்னூரை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் கருத்து வேறுபாடு காரணமாக 2 கணவர்களை பிரிந்து, 3வது திருமணம் செய்தார். இருவரும் அதே பகுதியில் கூலித் தொழிலுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த 25-ந் தேதி 3-வது கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது. ஆனாலும் அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தாயாரிடம் கூறி அழுதுள்ளார்.

தாயாரும் இதனை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, இதுகுறித்து தனது பள்ளியின் ஆசிரியை மூலம் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மற்றும் குன்னூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி 12 வயது சிறுமியின் வளர்ப்பு தந்தை மற்றும் அவருடைய தாயார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Read Entire Article