திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நாளை மறுநாள் (14ம் தேதி) நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதிலும் சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் நேற்று நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று புறப்படுகிறது. 14ம் தேதி மாலையில் இந்த ஊர்வலம் சன்னிதானத்தை அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரியும். மகரவிளக்கு பூஜைக்கு ஜனவரி 14ம் தேதி 5000 போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் 2 நாள் எருமேலியில் பேட்டை துள்ளல் appeared first on Dinakaran.