மகன் கடத்தப்பட்டதாக மாஜி அமைச்சர் புகார் தாய்லாந்து நோக்கி சென்ற விமானம் புனே திரும்பியது: மகாராஷ்டிராவில் பரபரப்பு

3 months ago 4

புனே: புனே மாவட்டத்தில் சிவசேனா கட்சியின் முக்கிய பிரமுகர் முன்னாள் அமைச்சர் தானாஜி சாவந்த். இவரது மகன் ருஷிராஜ் சாவந்த் தனது நண்பர்கள் 2 பேருடன் திடீரென காணாமல் போய்விட்டார். அவரை தாய்லாந்துக்கு விமானத்தில் கடத்திவிட்டார்கள் என்று தானாஜி சாவந்த் புனே போலீசில் புகார் அளித்தார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து உடனே விமானத்தை புனேக்கு திருப்புமாறு போலீசார் உத்தரவிட்டனர். போலீசாரின் உத்தரவை தொடர்ந்து விமானம் புனேவுக்கு திருப்பப்பட்டுள்ளது.

புனே வந்திறங்கியதும் விமானத்தில் இருந்த ருஷிராஜையும் அவரது நண்பர்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டு சென்றனர். தாய்லாந்து சென்ற விமானம் புனேவுக்கு திரும்பியதால் ஏமாற்றமடைந்த ரிஷிராஜ் பைலட்டுகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தாய்லாந்துக்கு நண்பர்களுடன் செல்வதை ருஷிராஜ் தன்னுடைய தந்தையிடம் தெரிவிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் விமானம் புனே திரும்புவதற்கு தானாஜி சாவந்த் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

The post மகன் கடத்தப்பட்டதாக மாஜி அமைச்சர் புகார் தாய்லாந்து நோக்கி சென்ற விமானம் புனே திரும்பியது: மகாராஷ்டிராவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article