போலீஸ்காரர் மாயம்; காதல் மனைவி புகார்

3 months ago 19

ஊத்தங்கரை, அக்.8: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாய்க்கனூரை சேர்ந்தவர் கலையரசன் (35). இவரது மனைவி புவனேஸ்வரி(35). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கலையரசன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போச்சம்பள்ளி 7ம் அணியில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2ம் தேதி, இரண்டு நாள் விடுப்பில் வீட்டிற்கு வந்தவர், மீண்டும் 4ம் தேதி காலை 11 மணிக்கு வேலைக்கு செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால், அவர் பணிக்கு செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி புவனேஸ்வரி, சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

The post போலீஸ்காரர் மாயம்; காதல் மனைவி புகார் appeared first on Dinakaran.

Read Entire Article