திருப்பூர், ஜன.18: திருப்பூர் பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் காவல் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பறிமுதல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் காவலர்கள் இருசக்கர வாகனங்களை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து, புகையிலை பொருட்கள் கொண்டு சென்றது உள்ளிட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சரிபார்க்கப்பட்டு வழக்கு எண்களுடன் வாகனங்களில் குறிப்பிடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநகர காவல் துறை சார்பில் விரைவில் வாகனங்கள் ஏலம் விடப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் சரிபார்ப்பு appeared first on Dinakaran.