
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற இந்த அதிரடி வேட்டையில் பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதோடு, 70 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், போர் பதற்றம் காரணமாக ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், தேசிய பாதுகாப்பின் நலனுக்காக பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், பாடல்கள், பாட்காஸ்ட்கள், காணொளி காட்சிகள் உள்ளிட்டவற்றை இந்திய ஓடிடி தளங்கள் நிறுத்த வேண்டும். ஓடிடி தளங்களில் இருந்து பாகிஸ்தானில் தயாரான படங்கள், தொடர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

