டெல்லி: போரில் பல புதிய யுக்திகளை பாகிஸ்தான் கையாண்டது, ஆனால் நாம் அதை முறியடித்தோம் என முப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பாகிஸ்தானின் முக்கிய 11 விமானப்படை தளங்களை இந்திய விமானங்கள் தாக்கின. சீனாவின் PL-15E ரக ஏவுகணைகளை இந்திய படைகள் சிதறிடித்தன. சீனா கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கைக்கொடுக்கவில்லை. பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியாவின் அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்தியாவுக்கு குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பன்னடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தானால் ஊடுருவ முடியவில்லை எனவும் முப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
The post போரில் பல புதிய யுக்திகளை பாகிஸ்தான் கையாண்டது, ஆனால் நாம் அதை முறியடித்தோம்: முப்படை அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.