சென்னை :ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை செய்யும் தலைநகராக தமிழ்நாடு மாறி வருகிறது. ஐபோன் தயாரிப்பை சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. ஐபோன் தயாரிப்பு பணியில் டாடா எலக்ட்ரானிக்ஸ், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன. அதன் ஒரு பகுதியாக, ஒசூரில் உள்ள ஆலையில் ஐபோன்களின் உற்பத்தியை ஒரு லட்சமாக உயர்த்த டாடா எலக்ட்ரானிக்ஸ் முடிவு செய்துள்ளது. தற்போது 50,000ஆக உள்ள ஐபோன் கேஸிங் உற்பத்தியை ஒரு லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது டாடா.
புதிய மாடல் ஆப்பிள் ஐபோன் அறிமுகமாவதற்கு முன், டாடா நிறுவன உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டு விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில் தற்போது ஐபோன் கேஸிங் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க டாடா தீவிரம் காட்டி வருகிறது. செப்.-ல் ஒசூர் ஆலை தீ விபத்தால், டாடா எலக்ட்ரானிக்ஸின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் திட்டம் தாமதமானது. அமெரிக்காவுக்கான ஐபோன் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவே இனி இருக்கும் என்று ஆப்பிள் சி.இ.ஓ. டிம்குக் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆப்பிள் சி.இ.ஓ. டிம்குக் அறிவிப்புக்கு ஏற்ப, ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க இந்திய நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
The post ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை செய்யும் தலைநகராக மாறி வருகிறது தமிழ்நாடு!! appeared first on Dinakaran.