சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியதும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ‘போப் பிரான்சிஸ் தமது 88வது அகவையில் 21ம் தேதி வாடிகன் நகரில் மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணா துயரமும் கொள்கிறது. போப் பிரான்சிஸின் இரக்க மிகுந்தவராக, முற்போக்கு குரலாக, பணிவு, அறநெறிசார் துணிவு மற்றும் ஆழமான மனிதநேயத்துடன் திருப்பீடத்தை வழிநடத்தினார். வறியவர் மீதான அர்ப்பணிப்பு, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு,
நீதி, அமைதி மற்றும் மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான அவரது முன்னெடுப்புகள் ஆகியவை கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத்தந்தன. அன்னாரது மறைவினால் அவரை இழந்து துயருற்றிருக்கும் வாடிகன் கத்தோலிக்க திருச்சபைக்கும், உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறது’ என்று சபாநாயகர் வாசித்தார். இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் அமைதி காத்தனர்.
The post போப் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் appeared first on Dinakaran.