''போதை பொருட்களை ஒழிப்பதில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும்'': ஆளுநர் ஆர்.என்.ரவி

5 months ago 32

தென்காசி: போதைப் பொருட்களை ஒழிப்பதில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் அமைப்பு, ரோட்டரி க்ளப் ஆப் ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இன்று போதை ஒழிப்பு பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்கரன்கோவிலில் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி திருவேங்கடம் ரோடு, யுபிவி மைதானம் வரை நடைபெற்றது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி வரவேற்று பேசினார்.

Read Entire Article