மதுரை: அந்தகால திரைப்படங்களில் வன்முறை, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் ஆகியவை இருக்காது. ஆனால், தற்போது இதுபோன்ற காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி தெரிவித்துள்ளது.
மதுரை கைத்தறி நகரில் மதுபான கடை திறக்க தடை விதிக்க கோரி, மேகலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது, நடந்த வாதம்: