போட்டியின்போது களத்திலேயே மயங்கி விழுந்து குத்துச்சண்டை வீரர் உயிரிழப்பு

1 day ago 2

அக்ரா,

நைஜீரியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் கேப்ரியல் லுவாஸ்கன் (வயது 40). இவர் நைஜீரியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க லைட்-ஹெவிவெயிட் முன்னாள் சாம்பியன் ஆவார்.

இந்நிலையில், கானா நாட்டில் தலைநகர் அக்ரா நகரில் நடைபெற்ற கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கேப்ரியல் கானாவை சேர்ந்த ஜான் பனுகுவை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் 3வது சுற்றில் களத்திற்கு வந்த கேப்ரியல் திடீரென களத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் கேப்ரியலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கேப்ரியல் குத்துச்சண்டை களத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

Read Entire Article