போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிப்பு செய்யாறு நகராட்சியில்

2 months ago 12

 

செய்யாறு, நவ.6: செய்யாறில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் நகராட்சி ஆணையாளர் வி.எல்.எஸ்.கீதா உத்தரவின்படி துப்புரவு ஆய்வாளர் கே.மதனராசன் மேற்பார்வையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

அதன்படி, சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை ஊழியர்கள் பிடித்து சென்று, நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டி வைத்துள்ளனர். மேலும், பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு ₹5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், மீண்டும் அதே மாடுகள் பிடிக்கப்பட்டால் பொது ஏலம் விடப்படும் எனவும், தொடர்ந்து இப்பணிகள் நடக்கும் எனவும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

The post போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிப்பு செய்யாறு நகராட்சியில் appeared first on Dinakaran.

Read Entire Article