சென்னை,
பசங்க, களவாணி திரைப்படம் மூலம் மக்களை கவர்ந்தவர் நடிகர் விமல். தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் கில்லி, கிரீடம் போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்த விமல், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
மீனாட்சி சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் விமல் நடித்த அப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. விமல் நடித்த 'வாகை சூடவா' திரைப்படமும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
நடிகர் விமல் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், 'போகுமிடம் வெகுதூரமில்லை'. அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மெரி ரிக்கெட்ஸ் நாயகியாக நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ள இந்த படத்துக்கு டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விமல் அமரர் ஊர்தி ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விமல் தற்போது தேசிங்குராஜா 2, சார் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி திரையில் வெளியானது. அதன்படி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களும் பெற்று வந்தது. இந்நிலையில் இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.