பரமக்குடி, ஜன.6: போகலூர் வட்டார வேளாண்மை துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பூச்சி நோய் கண்காணிப்பு திடலை வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு செய்தார். போகலூர் வட்டார வேளாண்மை துறை சார்பாக எட்டிவயல் கிராமத்தில் விவசாயி முருகேசன் நெல்வயலில் நிரந்தர பூச்சி, நோய் கண்காணிப்பு திடல் அமைக்கப்பட்டது. நிரந்தர பூச்சி நோய் கண்காணிப்பு திடலில் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட வயல் தேர்வு செய்து, 1 சதுர மீட்டர் அளவில் 5 நுண் திடல்கள் அமைக்கப்பட்டது.
இதில் நான்கு திடல்கள் வயலின் நான்கு மூலைகளிலும் ஒரு திடலை வயலின் நடுவிலும் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு நுண்திடலுக்கு 20 பயிர்கள் எண்ணிக்கை வீதம் மொத்தம் 100 பயிர்களில் வரும் பூச்சி, நோய் பாதிப்பு விபரம் கணக்கிடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
வேளாண்மை துணை இயக்குநர் அமர்லால், உதவி இயக்குநர் நாகராஜன், போகலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சித்திக், துணை அலுவலர் வித்யாசாகர் ஆகியோர் நிரந்தர பூச்சி, நோய் கண்காணிப்பு திடல் பூச்சி, நோய் தாக்குதல் விபரம் கணக்கீடு செய்வதை ஆய்வு செய்தனர்.
மேலும், தேவேந்திர நல்லூரில் ராஜேந்திரன் வயல் அமைக்கப்பட்ட கருப்பு கவுனி, தூயமல்லி பாரம்பரிய நெல் சாகுபடி திடல், நெல் ஆடுதுறை 45 வல்லுநர் விதையிலிருந்து ஆதார விதை உற்பத்தி செய்வதற்கு அமைக்கப்பட்ட விதைப்பண்ணைத் திடல், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், நொச்சி மரக்கன்றுகள் நடவு செய்ததை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, உதவி விதை அலுவலர் கண்ணன்,உதவி வேளாண்மை அலுவலர் ஜெயசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post போகலூர் வட்டாரத்தில் பூச்சி, நோய் கண்காணிப்பு திடல் ஆய்வு appeared first on Dinakaran.