10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தந்தை ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி

6 hours ago 2

பெரம்பலூர் மே 17: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தந்தை ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி அளவில் மாணவர் லோகேஷ் ராம் 489 மதிப்பெண் பெற்று முதலிடமும், சுஜித் மற்றும் துர்கா 488 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், காவியா 487 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை ரோவர் கல்விக் குழும மேலாண் தலைவர் வரதராஜன், துணை மேலாண் தலைவர் ஜான் அசோக் வரதராஜன், அறங்காவலர் மகாலெட்சுமி வரதராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் இயக்குநர் சதீஷ்வரன், தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், பள்ளி முதல்வர் டாக்டர் R.ராஜலெட்சுமி, துணை முதல்வர் கென்னடி, பள்ளி அலுவலக மேலாளர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

The post 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தந்தை ரோவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article