சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுதான் உண்மை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார். பொள்ளாச்சி வழக்கில் 12 நாட்கள் கழித்துதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என முதல்வர் குற்றம் சாட்டியிருந்தார். பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 குற்றவாளிகள் கைது என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். பொள்ளாச்சி வழக்கில் 12 நாட்கள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
தவறான தகவலை எதிர்க்கட்சித் தலைவர் அவையில் பதிவு செய்துள்ளார் என முதலமைச்சர் கூறினார். பொள்ளாச்சி சம்பவத்தில் முதலமைச்சர் மற்றும் அதிமுக சார்பில் ஆவணங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு; பொள்ளாச்சி விவகாரத்தில் முதலமைச்சர் கூறியதுதான் உண்மை. 24ம் தேதி புகார் அளித்த அன்றே வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. முந்தைய அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் 12ம் தேதி நடந்தது, 13ம் தேதி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளித்த அன்றே வழக்குப்பதிவு செய்யப்படவில்லை, 24ம் தேதிதான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இரண்டு தரப்பு ஆதாரங்களையும் நான் பார்த்துவிட்டேன், நான் கூறும் தீர்ப்பு தான் இறுதியான தீர்ப்பு என்று கூறினார். சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர். இருவரும் இதோடு முடித்துக் கொள்ளுங்கள் எனக்கூறியதால் முடித்துக் கொள்கிறேன் என்று கூறி அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
The post பொள்ளாச்சி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுதான் உண்மை: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.