‘பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு’ - தண்டனை விதிக்கப்பட்டோர் தரப்பு தகவல்

3 hours ago 3

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது நடந்த இச்சம்பவம் தொடர்பாக முதலில் பொள்ளாச்சி போலீஸார் விசாரித்தனர். பின்னர், சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று (மே 13) தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Read Entire Article