கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனையை விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த தீர்ப்பு போற்றத்தக்க ஒன்று.
பெண்களுக்கு ஏற்படுகிற இதுபோன்ற நிலை எதிர்காலத்தில் அமைந்து விடக்கூடாது என்பதற்காகதான் காலத்தால் அழியாத தீர்ப்பாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை இந்தியா முழுவதும் பெண்கள் புகழ்ந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு இனி எதிர்காலத்தில் மற்ற பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு; குற்றவாளிகள் மீதான தண்டனைக்கு வரவேற்பு: கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி appeared first on Dinakaran.