திருச்சி: கொடநாடு கொலை வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயிலில் நேற்று திருச்சி வந்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ரயில் நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்துள்ளது. கொடநாடு கொலை வழக்கிலும் எங்களை பொறுத்தவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சென்னையில் நடைபெற்ற சிந்தூர் வெற்றி பேரணியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து பேசுவோம். பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் பதவி கொடுப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
The post கொடநாடு வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை: நயினார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.